கொள்கை விளக்கம்

“சாதி, மத, பேதமின்றி, பாலின வேறுபாடின்றி, தனிமனித ஒழுக்கத்தை முன்னிறுத்தி, எம் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம்இ கல்வியியல், மருத்துவம் மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்க ஊழலற்ற சமூகம் அமைந்திட கடமையாற்றுவோம்.”

‘சாதி, மத, பேதமின்றி’

வந்தாரை வாழவைத்த, வாழ வைக்கும் தமிழகம். இதில் பிறப்பால் நீ தாழ்ந்தவன் நான் உயர்ந்தவன் என ஏற்ற தாழ்வினை ஏற்படுத்தும், உயிர் பலி எடுக்கும் இந்த சாதியின்றியும் எம் மதத்தவராயினும் மனிதம் ஒன்றே மாற்கம், அன்பு ஒன்றே இலக்கு என அனைத்து மதத்தினரையும் அரவணைத்து நம் இனம், தமிழினம், இந்த தாய் தமிழகம், தமிழினத்திற்கு மட்டுமின்றி அன்டிவரும் யாவரையும் அரவணைக்கும் என்ற கருத்தை முன்னிருத்துவோம். 

‘பாலின வேறுபாடின்றி’

ஆண், பெண் சமம் என்ற சமூக கண்ணோட்டத்துடன் மூன்றாம் பாலினத்தவரும் சமமே என கூறி அனைவருக்கும் வாழ்வியல் உரிமையுடன், மதிப்பு சார்ந்த அங்கிகாரம் மற்றும் உரிமையை வழங்கி சமூகத்தில் நிலவும் ஆதிக்க அமைப்பை தகற்தெறிய முற்படுவோம். 

‘தனிமனித ஒழுக்கத்தை முன்னிறுத்தி’

சமூகம் என்பது தனிப்பட்ட மனிதர்களின் கூட்டமைப்பே. சமூகம் சரியில்லை என்று கூறுவது தனி மனிதனாய் நாம் சரியில்லை என்பதன் பிரதிபலிப்பே. “நீ தேடும் மாற்றம் உன்னுள் தான் இருக்கிறது.” தனிமனித ஒழுக்கம் என்பது குழந்தை பருவத்திலிருந்து உணவோடு, கல்வியோடு சேர்த்து ஊட்டப்பட வேண்டியது. அந்த செயலை யாம் செய்வோம். உம்முடன் இணைந்து பிற மனிதரையும் தன்னைப்போல் என்னும் ஓர் அளபரிய மனிதாபிமானத்தை வளர்த்தெடுப்போம்.

‘நம் மக்களின்’ 

நம் தமிழ் மக்களின் உறவுகளாய் வாழும், உறவுகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வினை முறியடித்து அனைவரின் நலன் காப்போம். தோழமையே, தோள் கொடுப்போம்!

‘வாழ்வாதாரம்’ 

விவசாயம், வேளாண்மை, மீனவம், குடிசைத்தொழில், சுயத்தொழில், சிறுதொழில் என மக்களின் வாழ்வாதாரங்களாக திகழும் இவற்றை ஆதரித்து மக்கள் கார்பரேட் கம்பெனிகளுக்கு விலை போவதை தடுத்து, இவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பபோம், மேம்படுத்தப்படுத்துவோம் அதை சார்ந்தவர்களுக்கு இழப்பு ஏற்படின் உடனிருப்போம் ஆதரவாய், வாழ்வாதாரமாய். 

‘பொருளாதாரம்’ 

வாழ்வாதாரம், நம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அதனோடு வேலைவாய்புகள் மேம்படும். வேலையில்லா திண்டாட்டம் பெரும் சவாலாக இருக்கும் இந்த சமூகத்தில் தனிமனித, குடும்ப, சமூக பொருளாதாரத்தை உயர்த்துவது ஒருவருடைய வாழ்வை உயர்த்துவதற்கு சமம். உழைப்பின்றி உண்ணலாகாது என்று கூறுவது சரியே ஆனால் அந்த உழைப்பினை அளிப்பதற்கு உரிய தளம் இல்லாமல் போனதுவே இந்த பொருளாதார சீரழிவுக்கு காரணம். தேவையில்லாத விதத்தில் செலவிடும் ‘முதல்’ தேவையான மக்களின் வளர்ச்சியில் செலவிட யாவன செய்வோம். 

‘கல்வியியல்’

‘கல்வி’ ஒரு தனிவுடைமை அல்ல அது பொதுவுடைமை. கல்வி கற்பவனை மட்டுமல்லாது சமூகத்தையே உயர்த்தும். கல்வி பல கண்டுபிடிப்புகளை உருவாக்கும். பகுத்தரிவு சிந்தனைகளை வளர்த்தெடுக்கும். எது சரி, எது தவறு என சிந்திக்கவைக்கும். அத்தகைய கல்வியினை வியாபாரமாக்கி, விரயமாக்கி நவீன முறையில் கல்வி மறுக்கப்டும் பாமர மக்களுக்கு விலையில்லா தரமான கல்வி சென்றடைய செய்வோம். கற்பிக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். கல்வி சலுகையல்ல அது அரசின் கடமை.

‘மருத்துவம்’ 

‘நலமான வாழ்க்கையே’ வாழ்க்கையின் பெருங்கொடை அது அனைவருக்கும் சமம் அதில் எந்த பாகுபாடும் இல்லை. மருத்துவம் ஏழைக்கு ஒருவிதம் பணம் படைத்தவருக்கு மறுவிதம் என்பது உயிரில் செய்யப்படும் ஒரு துரோகம். இந்த ஏற்றத்தாழ்வு, மனிதருக்கு இழைக்கப்படும் ஓர் கொடுமை. அந்த ஓர் ஏற்றத்தாழ்வில்லா தரமான மருத்துவம் எளிய சாமானியனுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும். 

‘சகோதரத்துவம்’ 

யாதும் ஊரே யாவரும் கேளீர்…”என்று பெருமைபட்டுக் கொள்ளும் நாம் அதை செய்முறையிலும் செயல்படுத்துவோம். எந்த மதத்தவராயினும், எந்த நிரத்வராயினும், எந்த இனத்தவராயினும் மனிதனை மனிதனாய் மதிக்கும் பண்பாடு மிக்க தமிழராய் வளர ஊக்கப் படுத்துவோம் 

‘ஊழலற்ற சமூகம்’ 

அனைத்திற்கும் மூலதனம் பேராசை அது ஆள்பவர்களுக்கு மட்டும் என்று கைகழுவிட முடியாது. ஆளப்படும் மக்களுக்கும் அதில் மிகப்பெரிய பங்கு நிலவுகிறது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் அது வெளிச்சத்திற்கு வருகிறது நாம் செய்யும் ஊழல் சாதாரணமாக கொள்ளப்படுகிறது. ஊழல் இன்றளவும் தழைத்தோங்க காரணம் நீயும் நானும் தான். எனவே சுயநலம் மறந்து பிறநலன் காப்போமானால் தனக்காக சேர்க்ப்படும் பணம் பிறருக்காக செலவழிக்கப்படும். என்று நாம் பிறருக்காக களத்தில் இறங்குகிறோமோ அன்று மாறும் நமக்கான ஊழலற்ற வாழ்வு, ஓர் சமூகம். 

‘கடமையாற்றுவோம்’

உண்மையான, வெளிப்படையான, தரமான ஓர் அரசை அளிப்பது சேவையன்று ‘கடமை’. ஒவ்வொரு தமிழனும் தன்னகத்தே கொண்டு ஆற்ற வேண்டிய கடமை. செயல்படுவோம், கை கோர்ப்போம், கடமையை செய்திட. 

“வரலாறு மாற்றி எழுதப்படட்டும் எழுத்துக்களில்
மட்டுமல்ல நமது வாழ்கையில் “நமது வாழ்கையால்”
மாறுவோம்! மாற்றுவோம்!
“உண்மையான, வெளிப்படையான, தரமான ஓர் அரசை
அளிப்பது சேவையன்று ‘கடமை’ ”

– நாளைய தமிழகம்.