கொடியின் விளக்கம்

நீலமும், வெண்மையும் கலந்தது நம் கொடி. நீலம் பல்வேறு மனித குணாதிசயங்களை குறிக்கிறது. நம் கட்சிக் கொடியானது நீல நிற மூன்று பட்டைகளுடன் நடுவில் விண்மீனைக் கொண்டும், மையத்தில் வெண்மை இருக்க, சுற்றிலும் நீல நிறப் பட்டையை அரணாகக் கொண்டுள்ளது. 

முதல் நீல நிறப்பட்டை – நம்பிக்கை 

இக்கட்சியில் இணையும் ஒவ்வொரு மனிதரும் நம்பிக்கைக்குரியவர்கள், நம்பத்தகுந்தவர்கள். 

இரண்டாம் நீல நிறப்பட்டை – நேர்மை 

நம் கட்சி நேர்மையான ஓர் அரசை எதிர் நோக்கி இருக்கும். ஊழலை ஒழித்து நேர்மையை நிலைநாட்டும். 

மூன்றாம் நீல நிறப்பட்டை – பொறுப்பு 

நம் கட்சியிலுள்ள அனைவரும் என் நாடு, என் தமிழகம் என்று பொறுப்புடனும், மக்களின் நலனுக்காகவும் செயல்படுவோம். 

அரணாய் இருக்கும் நீல நிறப்பட்டை –விடா முயற்சி 

தமிழகத்தை ஊழலில்லாத, வளர்ச்சிமிகு, தன்னிறைவடைந்த தமிழகமாக மாற்றும் வரை ஓயமாட்டோம், கண் அயரமாட்டோம். நம் நாட்டிற்கு அரணாய் இருக்கும் இந்த நீலக் கடல் போல நம் தமிழின கலாச்சாரத்திற்கும் மக்களுக்கும் ஓர் அரணாய் நிற்போம். 

வெண்மை- அமைதி 

தீமைக்கெதிராய் போராடும் இந்தக் கட்சி அமைதியையே ஆயுதமாய் கொண்டிருக்கும். வன்முறை அற்ற ஒரு சமூகம் ஏற்பட போராடும். தனிமனித வாழ்விலும் இந்த அமைதியை சுவாசிக்க துணைநிற்கும். 

விண்மீண்- விடியற்காலை விண்மீண்

விடியல் வந்துவிட்டது என கூறும் விடிவெள்ளி, இரவு முடிந்து விட்டது என்பதை மறைமுகமாகக் கூறுகின்றது. ஆம், நம் கட்சி விடிவெள்ளியைப் போன்றது. இதோ இந்த விடிவெள்ளி, புதுக் கட்சியாய், உங்கள் முன் நாளைய தமிழகமாய்.

நாங்கள் நம்புகிறோம் அனைத்து முரண்பாடுகளுக்கும்
“முற்றுப் புள்ளி வைக்கலாம்
என்று... மாற்றம் சாத்தியமே!”