ஏன் நாளையதமிழகம்?

பலர் “நாளை” என்ற வார்த்தையை மிக எளிதாகவும், மிக ஏளனமாகவும் சித்தரிகின்றனர், எடுத்துகொள்கின்றனர். நாளை என்ற வார்த்தை வலிமைவாய்ந்த ஒன்று. எளிமையாக கடந்து செல்ல முடியாத ஒன்று. இந்த உலகம் சொல்லும் நியதி. ‘நாளை’ என்றுமே வருவதில்லை, நாம் என்றுமே வாழ்வதில்லை… ஆனால் நாம் வாழ்வது ‘நாளைக்காக’, நாம் உழைப்பது ‘நாளைக்காக’, சேமிப்பது ‘நாளைக்காக’ உண்பது ‘நாளைக்காக’, தேடுவது ‘நாளைக்காக’, நம் செயல்கள் ஒவ்வொன்றிலும் இந்த ‘நாளை’ ஒளிந்திருக்கிறது, ஒளிர்ந்திருக்கிறது என்பதே நிதர்சணமான உண்மை.

இன்றய நம் வாழ்க்கை நேற்றய வாழ்தலின் விளைவு, நாளைய நமது வாழ்க்கை இன்றய வாழ்தலின் விளைவாகும். எனவே ‘நேற்று’ இல்லாமல் ‘இன்று’ இல்லை, ‘இன்று’ இல்லாமல் ‘நாளை’ இல்லை, ‘நாளை’ இல்லாமல் ‘வாழ்க்கையே’ இல்லை. 

நாளை என்ற ஒற்றை வார்த்தை “நம்பிக்கையை” சுமந்து செல்கிறது. வார்த்தைகளில் அல்ல வாழ்க்கையில். சுருங்கக் கூரின், நமது கட்சி “நாளைய தமிழகம்” அல்ல “நம்பிக்கையின் தமிழகம்”

ஒரு ஏழை விவசாயின் நம்பிக்கை…

ஒரு ஆதரவற்ற மழலையின் நம்பிக்கை…

ஒரு வேலையில்லா பட்டதாரியின் நம்பிக்கை…

ஒரு வாழத்துடிக்கும் நோயாளியின் நம்பிக்கை…

ஒரு சமூக நீதி தேடும் பெண்மையின் நம்பிக்கை…

ஒரு வாழ்வியல் அங்கிகாரம் தேடும் மூன்றாம் பாலினத்தவரின் நம்பிக்கை…

என் தோழமையே!

நாளை என்பது எதிர்பார்ப்பில் வருவது. வளர்ச்சியைக் குறிப்பது. குளத்து நீரைப்போல் இருப்பதில் சுகம் காண்பதல்ல, நதிநீரைப் போல் கடலை நோக்கி ஓடிகொண்டே இருப்பது நம் கட்சி. இன்று நாம் எடுக்கும் முடிவுகள் இன்றைய தமிழக மேம்பாட்டிற்கு மட்டுமின்றி நாளைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் இருக்கும். இக்கட்சித் தலைமையில் அமைக்கப்படும் அரசு, வளர்ச்சியை நோக்கி நகரும். “நாளை” என்பது என்றுமே வருவதில்லை. ஆனால் அதை நோக்கி மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவர்களின் நம்பிக்கையை ஏந்தி முன்செல்லும் கட்சி. “இன்று சிறப்பாக செய்வோம், நாளை இதைவிட சிறப்பாக செய்வோம்”

நமது கட்சி “நாளைய தமிழகம்” அல்ல “நம்பிக்கையின் தமிழகம்