எங்களைப்பற்றி

நாங்கள் யார்?

நீங்கள் தான்… நாங்கள்…

விவசாயி தற்கொலை செய்யும் போது – கவலைக் கொண்ட

நீங்கள் தான்… நாங்கள்…

மீனவன் கரை திரும்பாத போது – கண்ணீர்விட்ட

நீங்கள் தான்…நாங்கள்…

ஏழை மாணவனுக்கு கல்விக் கல்வி மறுக்கப்பட்ட போது – கோபம் கொண்ட

நீங்கள் தான்… நாங்கள்…

அதிகாரம் கொண்டு அடிமை படுத்தப் படும் போது – கொதித்தெழுந்த

நீங்கள் தான்… நாங்கள்…

நாங்கள் உங்களின் பிரதிபலிப்பே அன்றி வேறென்ன?

அரசியல் ஓர் சாக்கடை என ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்பவர்களைத் தாண்டி, அரசியல் பணம் படைத்த குடும்பத்தினரின் பரம்பரை சொத்து என எண்ணுபவரின் எண்ணத்தை தகர்த்து, அரசியல் வழியே ஓர் விடிவு காலம் வராதா என ஏங்குபவரின் ஏக்கங்களை ஏந்தி, உங்கள் பிள்ளைகளாய், உங்கள் சொந்தங்களாய் அரசியல் என்னும் அஸ்திரத்தை கையிலெடுக்கும் எம்மை, எம் உடனிருந்து ஆதரிப்பீர். இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் என்று பல குரல்கள் ஒலித்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. பல காரணங்களால் தட்டி அலைகழிக்கப்படுகிறோம். வா என்று அழைக்கும் தமிழனமே, வந்தால் அலைகழிக்கும். இவர்கள் அப்படி என்ன செய்து விடுவார்கள், சிறியவர்கள், பணமில்லாதவர்கள் என்று அமுக்கப்படுகிறோம். நடிகர்கள், பிரபலங்கள், காலம் காலமாக ஊழல் செய்பவர்களின் காலடியில் தவமாய் கிடக்கின்றோம். என் தமிழனமே நீங்கள் தேடும் மாற்றதை நாங்கள் தருகிறோம். உங்களை நம்பி இந்த இளைய உள்ளங்கள் உங்களுக்காக களமிறங்குகிறோம். ஓரே ஒருமுறை நம்புங்கள், நிருபித்துக்காட்டுவோம். வாக்களித்து வாய்ப்பளியுங்கள். நாங்கள் எங்கள் படிப்பு என்று சமூக அக்கறையை பாடதிட்டத்தோடு வைக்கமால், இணையதளத்தோடு நிறுத்தி விடாமல், உண்மையான நேர்மையான அரசை எம்மால் கட்டி எழுப்ப முடியும் என்று களமிறங்குகிறோம். எங்களுடன் கரம் கோர்த்தடுங்கள்.

ஆர்வமிக்க எம் போன்ற இளைய நெஞ்சங்களை இணைந்திட அழைக்கிறோம்.

செயற்குழு உறுப்பினர்கள்

பெயர் தொலைபேசி எண்
ஆரோக்கிய ஜோ பிரபு 7708280981
ஸ்டீபன்ராஜ் 9677910604
மோயிசன் தைரியம் 8754237575
ரம்யா -
அப்துல்லா 8248648060
ஜைசன் 7418241661
கமல் 9585212225
குணாலன் 9994396502
ஜேன் 8148560014
கிங்ஸ்டன் 992285920
சுரேஷ் 9626967017
தினகரன் 9626617127
அக்வின் 9843971301


ஆலோசகர்கள்

பெயர் தொலைபேசி எண்
காளிஷ்வரன்(பேராசிரியர்) -
போஸ்கோ (சமூக ஆர்வலர்) -
கிறிஸ்டி (வழக்கறிஞர்) -
நாளைய தமிழகம்